Thursday, 7 February 2019

புதன் - Tiruvenkadu!!

புதன் நின்ற பாவகங்கள்

புதன் இலக்ணத்திலிருந்தால்...
கல்வி கற்றவர் எதையும் கூர்ந்து கேட்டுபதில் கூறும் குணமுடையவரும் சாத்திரங்கள்அறிந்தவரும் கவிதைத்திறம்படைத்தவரும் கருமைநிறம் படைத்தவரும் ஆவார்...

இரண்டாமிடத்திலிருந்தால்...
கவித்துவம் உடையவரும் நல்ல சகோதரம் உடையவரும் பேச்சில் இனிமையுள்ளவரும் நல்ல உணவு உண்ணுபவரும் நல்ல குடும்ப அமைப்பு உள்ளவரும் தானே உழைத்துச்சம்பாதிப்பவரும் ஆவார்...

மூன்றாமிடத்திலிருந்தால்...
எளிதில் பகைவரை வெல்பவரும் நல்ல சகோதரம் உள்ளவரும் பகுத்தறிவு ம் நுண்ணறிவு ம் உள்ளவரும் கடினமான உழைப்பாளியும் ஆவார்...

நான்காமிடத்திலிருந்தால்... நன்கு கற்றவரும் வாகனவசதியுள்ளவரும் நிலபுலனும் அதனால் லாபம் அடைபவரும் பேச்சுதிறம்படைத்தவரும் தாயிடம் அன்பு கொண்டவரும்
சூரியன் இணைந்திருப்பின் பட்டப்படிப்பு படித்தவரும் ஆவார்...

ஐந்தாமிடத்திலிருந்தால்...
நல்ல கல்விகற்றவரும் திறமைசாலியும் அரசாங்கத்தொடர்பால் ஆதாயம் பெறுபவரும் தாய்மாமனுக்கு ஆகாதவரும் அதிக புத்திரர் உடையவரும் மந்திரம் கற்றவரும் ஆவார்...

ஆறாமிடத்திலிருந்தால்...
சிறுவயதில் தாய்க்கு கண்டமும் மறைமுக எதிரிகள் உள்ளவரும் தாயாதி வர்க்கத்தினருடன் விரோதம் பாராட்டுபவரும் எதிரிகளை வெல்பவரும் கொடுக்கல் வாங்கலில் ஆர்வம் உள்ளவரும் ஆவார்...

ஏழாமிடத்திலிருந்தால்...
நல்ல தேக அமைப்பும் வாகன வசதியும் கடவுள் பக்தியுள்ளவரும் சமூக அந்தஸ்து உள்ளவரும் நல்ல வசதியான இடத்தில் களத்திரம் அமையப்பெறுபவரும்விரும்புவதைப்பெறும் அமைப்புள்ளவரும் மாநிறமான அழகுள்ள பெண்ணைத்திருமணம் புரிபவரும் ஆவார்...

எட்டாமிடத்திலிருந்தால்...
ஆயுள் தீர்க்கமானவரும் செல்வம் சேர்ப்பதில் சமர்த்தரும் அற்பபுத்திரர் உடையவரும் மனக்குழப்பம் உடையவரும் சூரியன் சேர்ந்திருப்பின் பட்டம்படித்தவரும் சுக்கிரன் மட்டும்சேர்ந்திருப்பின் திடீர் தனவந்தராகவும் ஆவார்...

ஒன்பதாமிடத்திலிருந்தால்...
செல்வம் உள்ளவரும் தருமகாரியங்களில் ஈடுபடுபவரும் தந்தைக்கு வேண்டிய உதவிகளனைத்தும் செய்பவரும் கோயில்கட்டுதல் குளம் வெட்டுதல் போன்ற தரும காரியங்களுக்குத்தலமை தாங்குபவரும் மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்பவரும் அள்ள அள்ள குறையாத வள்ளல் தன்மையுள்ளவரும். சூரியன் அல்லது சுக்கிரன் இணைந்திருப்பின் பெருஞ்செல்வந்தராக ஆவார்...

பத்தாமிடத்திலிருந்தால்...
சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விவசாயம் வியாபாரம் கலை எத்துறையாயினும் அத்துறையில் லாபம் பெறுபவரும் தொட்டகாரியம் அனைத்திலும் வெற்றிபெறுபவரும் ஆவார்...
பெரும்பாலும் இவர்கள் செய்யும் தொழில் கல்வி சம்பந்தமானதாகவே இருக்கும்...

பதினொறாமிடத்திலிருந்தால்..
இவர் இருக்குமிடத்தில் பணத்தட்டுப்பாடு இராது நிலபுல வீடு வசதியுள்ளவரும் ஆட்களைவைத்து வேலைவாங்குபவரும் சிறந்த அறிவாளியும் ஜோதிடம் அறிந்து அதனால் பிறரிடம் தர்க்கம் செய்பவரும் ஆவார்...

பனிரெண்டாமிடத்திலிருந்தால்.
கல்வியில் முன்னேற்றமில்லாதவரும் மூர்க்கமான முட்டாள்தனமாக பேசக்கூடியவரும் நடக்கக்கூடிய வரும் தாய்க்கு தோஷமானவரும் ஆவார்...


ஜோதிட முத்துக்கள்

கண்

தீராத நோய் (அ) மரண கண்டம் தரும் நோய் எப்படி அறிவது?

 லக்னத்திற்கு8 ம் இடத்தில் கிரகங்கள் இருந்தால் அந்த கிரக காரகதுவத்தின் மூலம் நோய் வரும்.

8 ம் இடத்தில் கிரகங்கள் இல்லை எனில் 8ம் இடத்தை பார்க்கின்ற கிரகங்கள் மூலம் காண வேண்டும்.

8 ம் இடத்தில் கிரகங்கள் அல்லது கிரஹ பார்வையோ இல்லை எனில் அந்த ராசிநாதனுக்குரிய மற்றும் அந்த ராசிக்கு சொல்லப்பட்ட பண்புகள் மூலம் நோய் மற்றும் கண்டம் உருவாகும்.

(உ-ம்) 8 இல் குரு எனில் கபம்( சளி,இருமல்,உடலின் பெரிய பாகம் பாதிப்பு, மஞ்சள் காமாலை).

ஜோதிடர் பாலாஜி சேலம்

சேலம் ஜோதிடர் பாலாஜியின் அற்புதங்கள்.....



இளம் வயதில் அற்புத திறமையை கொன்டு இருக்கும் ஜோதிட விஞ்ஞானி திரு . பாலாஜி அவர்கள் சென்ற ஆண்டு கூறிய லைவ் வீடியோவிலீ திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என்று கூறியிருந்தார் தற்போது அது அரங்கேறி யுள்ளது அதன் வீடியோ இதோ..

திருப்பதி நகை திருட்டு பற்றி இந்த காணொளி கடைசி நிமிடங்கள் பேசி இருக்கிறேன் புதிய நண்பர்கள் பார்க்கவும்

சென்ற ஆண்டே
எச்சரிக்கை   கொடுத்து உள்ளோம்.

சொன்னது : 28 January 2018 ·

நடந்தது  : - 1.2.2019

https://www.facebook.com/AstrologerBalaji/videos/854289058091130/
https://m.facebook.com/story.php?story_fbid=854289058091130&id=796323973887639

கதை சொல்ல போறோம்!!!


👇👇👇👇👇👇

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

*செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்*.

*ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்*.

*வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.

படித்ததில் பிடித்தது!

பாதுகாப்பு துறை நிகழ்வுகள்-07-02-19

திண்ணூர்தி தொழிற்சாலை

மத்திய அரசின் பாதுகாப்பு துறை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை யான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பலகட்ட போராட்ட களத்தின் முடிவில் கடந்த ஜனவரி 23,24,25 மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் போராட்டம் நடைபெற்றது தற்போது மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் இதுவரை வரவில்லை இதனால் மத்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் மிகுந்த கலக்கத்துடன் உள்ளனர்

மத்திய பாதுகாப்பு துறையில்    கவச வாகனங்கள்     ஊர்திகள் துப்பாக்கிகள் 
பீரங்கிகள் அனைத்தும் தயார்செய்யபட்டு இராணுவத்திற்க்கு அனுப்பப்படுகிறது இதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய ஆரம்பித்து தற்போது குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் தென் கொரிய பீரங்கிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.....

மர்ம உணவுகள்

மருத்துவ முடிச்சுகள் 

இஞ்சி ;-
                 வெறும் வயிற்றில் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுசளி மற்றும் சோர்வு நீங்கும்......

பூண்டு :- 
                   பாலில் பூண்டு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க தொண்டை கரகரப்பு இருமல் ஜலதோஷம் மறைந்து போகும்..

அத்தி பால்:-
                       அத்தி பால் கொன்டு பற்று போட்டால் மூட்டு வலி  குறையும்

சுக்கு :- 
                 சுக்கை மென்று அதன் சாறு மட்டுமே உட்கொள்ள குரல் கம்மல் சரியாகும்

அகத்திக்கீரை :- 
                              அகத்திக்கீரை கல்லீரல் நீரிழிவு  நோய்களுக்கு அருமருந்தாகும்

வெள்ளை பூண்டு :-
                                       வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து இரவில் குடித்து வர தூக்கமின்மை தொலைந்தே போகும்

இருமல் ஜலதோஷம் :- 
                                             வங்காரக்கீரை 
 கற்பூரவள்ளி இலை இரண்டையும் சம அளவு எடுத்துஅரைத்த சாப்பிட்டு வந்தால் இருமலதோஷம் குணமாகும்



Wednesday, 6 February 2019

எலும்புருக்கி மூலிகை

சதாபில்லை மின் மருத்துவ குணங்கள்



நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில பயன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்றின் விதைகளையோ அல்லது செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து, வீடுகளில், தோட்டங்களில் நட்டு வளர்க்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு செடிதான், அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி.

மேலைநாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்த செடிவகைகளில், இந்த மூலிகைச் செடியும் ஒன்று. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச்செடி, மூன்றடி உயரம் வரை மட்டுமே வளரும், சிறு செடியினமாகும். இலைகள் முருங்கை இலைகள் போல, சிறிதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் இருக்கும். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் வளரும் தன்மையுள்ள இந்தச்செடிகள், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையவை. இதன் இலைகள், வேர்கள், மற்றும் காய்கள் மருத்துவப்பலன்கள் மிக்கவை.வீடுகளில், பூங்காக்களில் பசுமைப் புத்துணர்வு அளிக்கும், அருவதா செடிகள்…அருவதாவை, வீடுகளில், வணிக நிறுவனங்களில் அழகுக்காக வளர்க்கிறார்கள். இந்தச் செடி இருக்கும் இடத்தில், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது என்பதுடன் ஈக்களும் அணுகாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக்கும் என்று அறியப்படுகிறது.

முதுகுத் தண்டு பாதிப்பை குணமாக்கும் :
முதுகு தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளை குணமாக்கும். உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து, எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் மிக்கவை அருவதா மூலிகையின் இலைகள். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும்.

கருப்பை பாதிப்புகளை குணப்படுத்தும்:
சதாப்பு இலைகள் எனும் அருவதாவின் இலைகள், மூட்டு வலிகளை குணப்படுத்தும் தன்மைமிக்கது. மன அழுத்த பாதிப்புகளால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி, இரத்தத்தை தூய்மைப்படுத்தி, வயிற்றுப் புழுக்களை அழிக்கும். இதன் எண்ணை, பெண்களின் கருப்பை பாதிப்புகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடலில் சூட்டினால் ஏற்படும் வாயுவை விலக்கி, அதனால் ஏற்பட்ட வாத உடல் வலி, வயிற்று வலி மற்றும் வேதனைகளைப் போக்கும் தன்மை மிக்கது.

சுளுக்கை சரி செய்யும் :
சுளுக்கு, தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும், உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வாக அமைகிறது. மூல வியாதிகளை சரிசெய்யும், உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது, அருவதா மூலிகை. இளம்பிள்ளைகளின் செரிமானமின்மை பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. கண் வியாதிகளைப் போக்கும்.

சுவாச பாதிப்புகளை குணப்படுத்தும் :
சதாப்பு இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப்போல கடைந்து, உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலம், மூட்டு வலிகள், சிறுநீர்ப்பை அடைப்புகள், சுவாசத்தில் ஏற்படும் பாதிப்புகளான மூச்சுத்திணறல் கோளாறுகளை சரிசெய்து, இதயத்தைக் காக்கும்.

உடல் சூட்டைத் தணிக்கும் :
சதாப்பு இலைகளை நிழலில் உலர்த்தி, இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றைப் பொடியாக்கி, அனைத்தையும் ஒன்று கலந்து, அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, உடலில் உள்ள சூடு தணியும்.

மன அழுத்த பாதிப்புகளை சீராக்கும் :
சதாப்பு இலைகளை சிறிது எடுத்து, நன்கு மையாக அரைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும். சதாப்பு இலைச்சாற்றை, தேனில் குழைத்து சாப்பிட்டும் வரலாம்.

குழந்தைகளின் உடல் நலம் காக்கும் மருந்து;
சதாப்பு இலையை நன்கு அரைத்து அந்த விழுதை, மிளகுத்தூள் சேர்த்து, சிறிதளவு எடுத்து, தாய்ப்பாலில் கலந்து, குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் புகட்டி வர, குழந்தைகளின் நெஞ்சு சளி தீரும்.

ஜுரம், இருமல் போக்கும் சதாப்பு இலை :
சதாப்பு இலைகளுடன் சிறுநாகப்பூ விதைகளைச் சேர்த்து அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வர, விட்டுவிட்டு வரும் ஜுரம் மற்றும் இருமல் பாதிப்புகள் விலகும்.
அதிமதுரம், பேரரத்தை,வசம்பு மற்றும் சதாப்பிலை இவற்றை சேர்த்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடித்து தினமும் பருகி வர, ஜுரம் மற்றும் உடல் வலிகள் தீரும்.

பக்கவாத பாதிப்புகளை குணமாக்கும் :
பாரிச வாயு எனும் பக்கவாதத்தின் பாதிப்பால் உடல் நலமின்றி, சிலர் வீடுகளிலேயே இருப்பார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிவாரணமாக, சதாப்பிலை திகழும்.சதாப்பிலைகளை நன்கு அரைத்து, உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவி வர, சிறிது சிறிதாக பாதிப்புகள் விலகி, செயல்பட ஆரம்பிக்கும். வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் குணமாகும் தன்மை மிக்கது.


சதாப்பிலை குடிநீர் தரும் அரிய நன்மைகள் :
சதாப்பிலைகளை சேகரித்து, அவற்றை சிறிது நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீர் சுண்டி வந்ததும், ஆற வைத்து, தினமும் இரு வேளை அல்லது மூன்று வேளை பருகி வர, மூட்டு வலி சரியாகும். குடல் புழுக்கள் அழியும். உடல் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கி, உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும்.சதாப்பிலை குடிநீர், கீழ்க்கண்ட வியாதிகளின் பாதிப்பையும் போக்கும்…
தாய்பால் சுரபி

பெண்களின் தாய்ப்பால் சுரப்பை தடுத்து, உடல் நலம் காக்கும். கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைப் போக்கும். வாந்தியைப் போக்கும்.காதுகளில் உள்ள புண் மற்றும் வலியை விலக்கும். தசைப்பிடிப்பு, சுளுக்கு போன்ற பாதிப்புகளை சரியாக்கும். பல் ஈறுகளில் இரத்தம் வடிவதைக் கட்டுப்படுத்தும்.

ஞாபக சக்தி

ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் :
முகம் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். தொண்டை வலி மற்றும் நாக்கின் சுவையின்மை கோளாறை சரி செய்யும்.ஞாபக ஆற்றலை அதிகரிக்கும், மன அழுத்தம், மனச் சோர்வை நீக்கி, மனதை உற்சாகமாக செயல்பட வைக்கும்.

மூலிகை சாம்பிராணி


‘சதாப்பிலை மூலிகை சாம்பிராணி :
கடுமையான ஆஸ்துமா, சளி இருமல் பாதிப்பு உள்ளவர்கள் மூச்சு விடுவதில், சுவாசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, இரவில் உறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவார்கள். அவர்களின் இந்த பாதிப்புகள் நீங்கி, சுவாசம் சீராகி, உடல் நலம் மேம்பட்டு நல்ல உறக்கத்தை அடைய, சதாப்பிலை உதவிசெய்யும்.

இலைகளை நன்கு உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொண்டு, தூபக்காலில் உலர்ந்த தேங்காய் மூடிகளை வைத்து, தணலை உண்டாக்கி, அதில் உலர்ந்த சதாப்பிலை தூளையோ அல்லது உலர்ந்த இலைகளையோ இட, எழும் புகையை, தினமும் ஆஸ்துமா மற்றும் இருமல் பாதிப்புள்ளவர்கள் நன்கு சுவாசிக்க, சளியின் கடுமை படிப்படியாகக் குறையும். நல்ல உறக்கமும் வரும். இந்தப் புகையை, காக்கா வலிப்பு உள்ளவர்களும் சுவாசிக்க, பாதிப்புகள் விலகும்

வடபழனி பணிமனைவில் ஓய்வறையில் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 தொழில் நுட்ப ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதில் பாரதி என்ற தொழில்நுட...