Showing posts with label பாலாஜி ஜோதிடர் # சேலம். Show all posts
Showing posts with label பாலாஜி ஜோதிடர் # சேலம். Show all posts

Sunday, 3 March 2019

WORLD Astrology !!! 03-02-2019







உலகியல் ஜோதிடம்
==================
உலகியல் ஜோதிட பலன் காணும் போது 12 பாவகங்களை பிரித்து தெரிந்துகொண்டால் பலன் காண்பது கொஞ்சம் எளிதான ஒன்றாக இருக்கும் .
முதல் பாவகம்
=============
நாட்டின் முக்கிய பிரமுகர்கள், நாட்டின் சுய கௌரவம், அதிகாரம், கௌரவமான நடத்தைகள். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருத்தல், முன்னெச்சரிக்கைகள் .
இரண்டாம் பாவகம்
=================
ஒரு நாட்டின் செல்வங்கள், நிதித்துறை, அரசாங்கத்தின் உத்தரவுகள், அரசாங்கத்தின் வாக்குறுதிகள்.
மூன்றாம் பாவகம்
================
ஒருநாட்டின் அரசாங்கத்தின் பத்திரங்கள், அரசாங்கத்தின் கடிதங்கள், தகவல் தொடர்புத்துறை , போக்குவரத்துத்துறை.
நான்காம் பாவகம்
================
நாட்டு அரசாங்கத்தின் கட்டிடங்கள், கல்வித்துறை ,அரசாங்க அலுவலகங்கள், ஏரி, குளம் ,குட்டைகள், கிணறுகள். அரசாங்க அலுவலக வளாகங்கள்.
ஐந்தாம் பாவகம்
===============
ஒரு நாட்டின் விளையாட்டுத்துறை , கலைத்துறை, சுற்றுலாத்துறை, அரசாங்கம் நடத்தும் நிகழ்ச்சிகள் .
ஆறாம் பாவகம்
==============
நாட்டின் கடன், வழக்குகள், அரசாங்க பணியாளர்கள், எதிரிகள் , மருத்துவத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகங்கள்.
ஏழாம் பாவகம்
=============
நீதித்துறை, பொதுநலத்துறை, நட்புறவு கொள்பவர்கள், மக்கள் நல மேம்பாட்டுத்துறை.
எட்டாம் பாவகம்
==============
அரசாங்கத்தின் சொத்துகள் திருடப்படுதல், நிலுவையில் உள்ள நீண்டகால வழக்குகள்,பெரும் தலைவர்களின் இழப்புகள், பெரிய விபத்துகள்,சேதங்கள், கட்டுப்படுத்த முடியாத நோய்கள், அரசாங்க தண்டனைகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், மறைமுக எதிரிகள் , அச்சுறுத்தல்கள்.
ஒன்பதாம் பாவகம்
================
அரசாங்க வங்கிகள், அறநிலையத்துறை, பல்கலை கழகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், கோவில்கள், ஆயுதக் கிடங்குகள், ராணுவம்.
பத்தாம் பாவகம்
==============
நாட்டிற்கு பாராட்டு கிடைத்தல், வேலை வாய்ப்புத்துறைகள், வணிக வளாகங்கள், உயர் விருதுகள், வெற்றிச்சின்னங்கள், கனிம வளங்கள்.
பதினொன்றாம் பாவகம்
=====================
அரசாங்க உதவிகள், நினைவுச் சின்னங்கள், வணிக வரிகளின் முலம் லாபம் கிடைத்தல், அதிசயமான பொருட்கள், நாட்டு மக்களின் மகிழ்ச்சி.
பனிரண்டாம் பாவகம்
===================
அரசாங்க மருத்துவமனைகள், உளவுத்துறை, பட்ஜெட் ,ஜெயில் பூங்காக்கள், நாட்டின் எல்லைகள்.
தொடரும்…….

Saturday, 23 February 2019

ஓரை சொல்லும் நேரங்கள்

*ஓரை*

ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. எந்தக்கிழமை துவங்கிறதோ (புதன்கிழமை என்றால் புதன் ஓரை, வெள்ளி என்றால் சுக்கிரன் ஓரை) அதற்குரிய கிரகத்தின் ஓரை முதல் ஒரு மணி நேரமாகக் கொள்ளப்படுகிறது.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ஓரையாகவே கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றை மேற்கொள்ளலாம்.

இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.

நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் செவ்வாய் ஓரை மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது. செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும், வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது. இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.

தோல்வி தரும் கிரக ஓரைகள்

இந்த கிழமையில் இந்த ஓரை வரும் போது எந்த காரியத்தையும் துவங்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது

ஞாயிற்றுக் கிழமை அன்று சுக்கிர ஓரை தோல்வியை தரும்.

திங்கள் கிழமை அன்று சுக்கிரன், புதன் ஓரைகள் சரியாக செயல்படாது.

செவ்வாய் கிழமை அன்று புதன் ஓரை தோல்வி தரும்.

புதன் கிழமை அன்று குரு, சந்திர ஓரைகள் சரியாக செயல்படாது.

குரு (வியாழன்) அன்று சுக்கிர, புதன் ஓரைகள் கிழமை சரியாக செயல்படாது.

வெள்ளி கிழமை அன்று குரு, சந்திர ஓரைகள் தோல்வி தரும்.

சனிக்கிழமை அன்று சந்திர ஓரை தவறை செய்யும்!

Moon Star

🌼சந்திர  பலம்  உள்ள  நாட்கள்🌼

தேடினாலும் எளிதில்  கிட்டா பதிவு

🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

🌼அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

🌼மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.🌼

Monday, 11 February 2019

Astrologer Balaji Selam

குழந்தைபாக்கியம் ஜோதிடத்தில் :-
=================================


வணக்கம் அன்பு நண்பர்களே,

ஜோதிடத்தில் குழந்தை பிறப்பு
என்பது ஒரு முக்கியமான ஒரு அங்கம்.

அதில் குருநாதர் சித்தயோகி சிவதாசன் அவர்கள் கற்றுக் கொடுத்த சில விதிமுறைகள் அடிப்படையில் சமீபகாலமாக துல்லியமாக எந்த குழந்தை பிறக்கும் என்பதை முன்கூட்டியே சொல்லி வருகிறோம்.

நேற்று வேந்தர் தொலைக்காட்சியில் கூட

1. திரு விராட் கோலி   அவர்களுக்கும்

2. அம்பானி  அவர்களுடைய
மகள் இஷா அம்பானிக்கும்

3. அதேபோல தமிழ் நடிகை சமந்தா அவர்களுக்கும் ஆண் குழந்தை பிறக்கும் என்றும்

உலக அழகி பிரியங்கா சோப்ரா
அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று ஆருடம்  கூறினேன்.

இதேபோல உங்களுக்கு தெரிந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள்,  நடிகைகள்  யாருக்கேனும் புதிதாக திருமணம் நடந்தால் அவர்களை பற்றி என்னிடம் கூறினால்
அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை பற்றி மிகத் துல்லியமாக லைவ் புதிதாக இதைப்பற்றி போடலாம்

மற்ற லைவ் போலவே இதுவும்
துல்லியமாக கணித்து காரணத்தை கூறாமல் பலன்களை மற்றும் வெளிப்படையாக போடுகிறேன் மக்கள் அனைவருக்கும் புரியும்படி.

இன்றிலிருந்து யாரேனும் உங்களுக்கு தெரிந்த உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள்.,  விளையாட்டு துறை , அரசியல் துறை,  சினிமா துறை,
போன்ற துறைகளில் திருமணம் நடந்தாலும் மகப்பேறு அடைந்தாலும் என்னிடம் தெரிவிக்கவும் ஆதாரத்துடன் நிச்சயமாக அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்ற ஒரு காணொளி போடுவோம் நூற்றுக்கு 95 சரியாக வரும்

இதுவரை நம்மிடம்  ஜாதகம் கட்டண அடிப்படியில் பார்த்தவர்களுக்கு சரியாக வந்துள்ளது

இது ஒரு புது முயற்சி செய்வோம்
எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்
உதவி செய்யுங்கள்
நிச்சயமாக கூட்டுசேர்ந்து
நிச்சயமாக வெற்றி அடையலாம்

நன்றி
இவ்வாறு நண்பர் பாலாஜி அவர்கள் முகநூல் உரையில் கூறியுள்ளார் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முகநூல் பக்கத்தில் தொடருங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=2554784774562742&id=100000937323608

Thursday, 7 February 2019

ஜோதிடர் பாலாஜி சேலம்

சேலம் ஜோதிடர் பாலாஜியின் அற்புதங்கள்.....



இளம் வயதில் அற்புத திறமையை கொன்டு இருக்கும் ஜோதிட விஞ்ஞானி திரு . பாலாஜி அவர்கள் சென்ற ஆண்டு கூறிய லைவ் வீடியோவிலீ திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என்று கூறியிருந்தார் தற்போது அது அரங்கேறி யுள்ளது அதன் வீடியோ இதோ..

திருப்பதி நகை திருட்டு பற்றி இந்த காணொளி கடைசி நிமிடங்கள் பேசி இருக்கிறேன் புதிய நண்பர்கள் பார்க்கவும்

சென்ற ஆண்டே
எச்சரிக்கை   கொடுத்து உள்ளோம்.

சொன்னது : 28 January 2018 ·

நடந்தது  : - 1.2.2019

https://www.facebook.com/AstrologerBalaji/videos/854289058091130/
https://m.facebook.com/story.php?story_fbid=854289058091130&id=796323973887639

Monday, 28 January 2019

திரு பாலாஜி சேலம் ஜோதிடர்

   பாலாஜி ஜோதிடர் லைவ் 

1 : https://m.facebook.com/story.php?story_fbid=2524014190973134&id=100000937323608


2 : https://m.facebook.com/story.php?story_fbid=2521518607889359&id=100000937323608

3 : https://m.facebook.com/story.php?story_fbid=2521303214577565&id=100000937323608

4 : https://m.facebook.com/story.php?story_fbid=2521015277939692&id=100000937323608

5 : https://m.facebook.com/story.php?story_fbid=2513610012013552&id=100000937323608

வடபழனி பணிமனைவில் ஓய்வறையில் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 தொழில் நுட்ப ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதில் பாரதி என்ற தொழில்நுட...