Thursday, 7 February 2019

மர்ம உணவுகள்

மருத்துவ முடிச்சுகள் 

இஞ்சி ;-
                 வெறும் வயிற்றில் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுசளி மற்றும் சோர்வு நீங்கும்......

பூண்டு :- 
                   பாலில் பூண்டு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க தொண்டை கரகரப்பு இருமல் ஜலதோஷம் மறைந்து போகும்..

அத்தி பால்:-
                       அத்தி பால் கொன்டு பற்று போட்டால் மூட்டு வலி  குறையும்

சுக்கு :- 
                 சுக்கை மென்று அதன் சாறு மட்டுமே உட்கொள்ள குரல் கம்மல் சரியாகும்

அகத்திக்கீரை :- 
                              அகத்திக்கீரை கல்லீரல் நீரிழிவு  நோய்களுக்கு அருமருந்தாகும்

வெள்ளை பூண்டு :-
                                       வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து இரவில் குடித்து வர தூக்கமின்மை தொலைந்தே போகும்

இருமல் ஜலதோஷம் :- 
                                             வங்காரக்கீரை 
 கற்பூரவள்ளி இலை இரண்டையும் சம அளவு எடுத்துஅரைத்த சாப்பிட்டு வந்தால் இருமலதோஷம் குணமாகும்



Wednesday, 6 February 2019

எலும்புருக்கி மூலிகை

சதாபில்லை மின் மருத்துவ குணங்கள்



நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில பயன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்றின் விதைகளையோ அல்லது செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து, வீடுகளில், தோட்டங்களில் நட்டு வளர்க்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு செடிதான், அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி.

மேலைநாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்த செடிவகைகளில், இந்த மூலிகைச் செடியும் ஒன்று. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச்செடி, மூன்றடி உயரம் வரை மட்டுமே வளரும், சிறு செடியினமாகும். இலைகள் முருங்கை இலைகள் போல, சிறிதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் இருக்கும். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் வளரும் தன்மையுள்ள இந்தச்செடிகள், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையவை. இதன் இலைகள், வேர்கள், மற்றும் காய்கள் மருத்துவப்பலன்கள் மிக்கவை.வீடுகளில், பூங்காக்களில் பசுமைப் புத்துணர்வு அளிக்கும், அருவதா செடிகள்…அருவதாவை, வீடுகளில், வணிக நிறுவனங்களில் அழகுக்காக வளர்க்கிறார்கள். இந்தச் செடி இருக்கும் இடத்தில், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது என்பதுடன் ஈக்களும் அணுகாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக்கும் என்று அறியப்படுகிறது.

முதுகுத் தண்டு பாதிப்பை குணமாக்கும் :
முதுகு தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளை குணமாக்கும். உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து, எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் மிக்கவை அருவதா மூலிகையின் இலைகள். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும்.

கருப்பை பாதிப்புகளை குணப்படுத்தும்:
சதாப்பு இலைகள் எனும் அருவதாவின் இலைகள், மூட்டு வலிகளை குணப்படுத்தும் தன்மைமிக்கது. மன அழுத்த பாதிப்புகளால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி, இரத்தத்தை தூய்மைப்படுத்தி, வயிற்றுப் புழுக்களை அழிக்கும். இதன் எண்ணை, பெண்களின் கருப்பை பாதிப்புகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடலில் சூட்டினால் ஏற்படும் வாயுவை விலக்கி, அதனால் ஏற்பட்ட வாத உடல் வலி, வயிற்று வலி மற்றும் வேதனைகளைப் போக்கும் தன்மை மிக்கது.

சுளுக்கை சரி செய்யும் :
சுளுக்கு, தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும், உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வாக அமைகிறது. மூல வியாதிகளை சரிசெய்யும், உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது, அருவதா மூலிகை. இளம்பிள்ளைகளின் செரிமானமின்மை பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. கண் வியாதிகளைப் போக்கும்.

சுவாச பாதிப்புகளை குணப்படுத்தும் :
சதாப்பு இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப்போல கடைந்து, உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலம், மூட்டு வலிகள், சிறுநீர்ப்பை அடைப்புகள், சுவாசத்தில் ஏற்படும் பாதிப்புகளான மூச்சுத்திணறல் கோளாறுகளை சரிசெய்து, இதயத்தைக் காக்கும்.

உடல் சூட்டைத் தணிக்கும் :
சதாப்பு இலைகளை நிழலில் உலர்த்தி, இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றைப் பொடியாக்கி, அனைத்தையும் ஒன்று கலந்து, அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, உடலில் உள்ள சூடு தணியும்.

மன அழுத்த பாதிப்புகளை சீராக்கும் :
சதாப்பு இலைகளை சிறிது எடுத்து, நன்கு மையாக அரைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும். சதாப்பு இலைச்சாற்றை, தேனில் குழைத்து சாப்பிட்டும் வரலாம்.

குழந்தைகளின் உடல் நலம் காக்கும் மருந்து;
சதாப்பு இலையை நன்கு அரைத்து அந்த விழுதை, மிளகுத்தூள் சேர்த்து, சிறிதளவு எடுத்து, தாய்ப்பாலில் கலந்து, குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் புகட்டி வர, குழந்தைகளின் நெஞ்சு சளி தீரும்.

ஜுரம், இருமல் போக்கும் சதாப்பு இலை :
சதாப்பு இலைகளுடன் சிறுநாகப்பூ விதைகளைச் சேர்த்து அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வர, விட்டுவிட்டு வரும் ஜுரம் மற்றும் இருமல் பாதிப்புகள் விலகும்.
அதிமதுரம், பேரரத்தை,வசம்பு மற்றும் சதாப்பிலை இவற்றை சேர்த்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடித்து தினமும் பருகி வர, ஜுரம் மற்றும் உடல் வலிகள் தீரும்.

பக்கவாத பாதிப்புகளை குணமாக்கும் :
பாரிச வாயு எனும் பக்கவாதத்தின் பாதிப்பால் உடல் நலமின்றி, சிலர் வீடுகளிலேயே இருப்பார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிவாரணமாக, சதாப்பிலை திகழும்.சதாப்பிலைகளை நன்கு அரைத்து, உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவி வர, சிறிது சிறிதாக பாதிப்புகள் விலகி, செயல்பட ஆரம்பிக்கும். வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் குணமாகும் தன்மை மிக்கது.


சதாப்பிலை குடிநீர் தரும் அரிய நன்மைகள் :
சதாப்பிலைகளை சேகரித்து, அவற்றை சிறிது நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீர் சுண்டி வந்ததும், ஆற வைத்து, தினமும் இரு வேளை அல்லது மூன்று வேளை பருகி வர, மூட்டு வலி சரியாகும். குடல் புழுக்கள் அழியும். உடல் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கி, உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும்.சதாப்பிலை குடிநீர், கீழ்க்கண்ட வியாதிகளின் பாதிப்பையும் போக்கும்…
தாய்பால் சுரபி

பெண்களின் தாய்ப்பால் சுரப்பை தடுத்து, உடல் நலம் காக்கும். கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைப் போக்கும். வாந்தியைப் போக்கும்.காதுகளில் உள்ள புண் மற்றும் வலியை விலக்கும். தசைப்பிடிப்பு, சுளுக்கு போன்ற பாதிப்புகளை சரியாக்கும். பல் ஈறுகளில் இரத்தம் வடிவதைக் கட்டுப்படுத்தும்.

ஞாபக சக்தி

ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் :
முகம் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். தொண்டை வலி மற்றும் நாக்கின் சுவையின்மை கோளாறை சரி செய்யும்.ஞாபக ஆற்றலை அதிகரிக்கும், மன அழுத்தம், மனச் சோர்வை நீக்கி, மனதை உற்சாகமாக செயல்பட வைக்கும்.

மூலிகை சாம்பிராணி


‘சதாப்பிலை மூலிகை சாம்பிராணி :
கடுமையான ஆஸ்துமா, சளி இருமல் பாதிப்பு உள்ளவர்கள் மூச்சு விடுவதில், சுவாசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, இரவில் உறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவார்கள். அவர்களின் இந்த பாதிப்புகள் நீங்கி, சுவாசம் சீராகி, உடல் நலம் மேம்பட்டு நல்ல உறக்கத்தை அடைய, சதாப்பிலை உதவிசெய்யும்.

இலைகளை நன்கு உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொண்டு, தூபக்காலில் உலர்ந்த தேங்காய் மூடிகளை வைத்து, தணலை உண்டாக்கி, அதில் உலர்ந்த சதாப்பிலை தூளையோ அல்லது உலர்ந்த இலைகளையோ இட, எழும் புகையை, தினமும் ஆஸ்துமா மற்றும் இருமல் பாதிப்புள்ளவர்கள் நன்கு சுவாசிக்க, சளியின் கடுமை படிப்படியாகக் குறையும். நல்ல உறக்கமும் வரும். இந்தப் புகையை, காக்கா வலிப்பு உள்ளவர்களும் சுவாசிக்க, பாதிப்புகள் விலகும்

Monday, 28 January 2019

கார்கில் நாயகன் காலமானார்

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர்



A native of Mangalore, Fernandes was sent to Bangalore in 1946 to be trained as a priest. In 1949, he moved to Bombay, where he joined the socialist trade union movement. Becoming a trade union leader, Fernandes organised many strikes and bandhs in Bombay in the 1950s and 1960s while working with the Indian Railways. He defeated S K Patil of Indian National Congress in the 1967 parliamentary elections from the South Bombay (now south Mumbai) constituency. He organised the 1974 Railway strike, when he was President of the All India Railwaymen's Federation. Fernandes went underground during the Emergency era of 1975, while challenging Prime Minister Indira Gandhi for imposing a state of emergency,[8] but in 1976 he was arrested and tried in the infamous Baroda dynamite case.

In 1977, after the Emergency had been lifted, Fernandes won the Muzaffarpur seat in Bihar in absentia and was appointed as Union Minister for Industries. During his tenure as union minister, he ordered American multinationals IBM and Coca-Cola to leave the country, due to investment violations. He was the driving force behind the Konkan Railway project during his tenure as railway minister from 1989 to 1990. He was a defence minister in the National Democratic Alliance (NDA) Government (1998–2004), when the Kargil War broke out between India and Pakistan, and India conducted its nuclear tests at Pokhran. A veteran socialist, Fernandes has been dogged by various controversies, including the Barak Missile scandal and the Tehelka affair. George Fernandes won nine Lok Sabha elections from 1967 to 2004. He died on 29 January 2019.

திரு பாலாஜி சேலம் ஜோதிடர்

   பாலாஜி ஜோதிடர் லைவ் 

1 : https://m.facebook.com/story.php?story_fbid=2524014190973134&id=100000937323608


2 : https://m.facebook.com/story.php?story_fbid=2521518607889359&id=100000937323608

3 : https://m.facebook.com/story.php?story_fbid=2521303214577565&id=100000937323608

4 : https://m.facebook.com/story.php?story_fbid=2521015277939692&id=100000937323608

5 : https://m.facebook.com/story.php?story_fbid=2513610012013552&id=100000937323608

திண்ணன் முதல் கண்ணப்பர் ஆன கதை

கண்ணப்பர் வரலாறு உண்மையா??

இன்றைய தினம் உலகின் முதல் கண் தானம் செய்த #கண்ணப்ப_நாயனார் குரு பூஜை திருநாள்…

பெயர்: கண்ணப்ப நாயனார்
குலம்: வேடர் - கங்கை குலம்
பூசை நாள்: தை மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி

கலைமலிந்த சீர் நம்பி
கண்ணப்பர்க்கு அடியேன்
                      - திருத்தொண்டர் தொகை
________________________________________

          🌹வரலாற்று சுருக்கம்🌹

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரர், #திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் வேடர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு பன்றியை வேட்டையாட சென்ற போது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.

அந்நாள் முதல் அன்போடு கலந்த தூய பக்தி செலுத்தி, வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார்.

    🌹லிங்கத்தில் ரத்தம் வருதல்🌹

இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான்.

அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து லிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது.

   🌹கண் கொடுத்த கண்ணப்பர்🌹

திண்ணனார் சற்றும் யோசிக்காமல் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.

"இன்று முதல் கண்ணப்பன் என்று அழைக்கப்படுவாய், யாவரும் வேண்டும் முக்தியை உனக்கு அளிக்கிறேன்" என்று கூறி எம்பெருமான் முக்தி அளித்தார். இன்றைக்கும் காளஹஸ்தி சிவன் திருக்கோயிலில் கண்ணப்பருக்கு என தனிச் சன்னதி விளங்கி வருவது அவர் பக்திக்கு சான்றாகி நிற்கிறது எனலாம்.

#சிவாய_நம

காஞ்சியின் மகிமைகள் !! 40 ஆண்டுகள் கழித்து ஒரு திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவை ஜூலை மாதம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சரியான தேதியை முடிவு செய்ய சில அர்ச்சகர்களிடம் ஆலோசனைக் கேட்டு அறநிலையத் துறை சார்பில் பதில் பெறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நூற்றுக்கால் மண்டபத் தின் வடக்கில் உள்ள அர்த்தபுஷ் கரணி குளத்துக்கு அடியில் நீராழி மண்டபம் உள்ளது. இந்த மண்ட பத்தினுள் அத்திமரத்தால் செய்யப் பட்ட அத்திவரதர் பெருமாள் சிலை சயன திருக்கோலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கரைக்கு வந்து பக்தர் களுக்கு காட்சி அளிப்பார். இந்த அத்திவரதர் திருவிழா கோலாகலமாக காஞ்சிபுரத்தில் நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா கடைசியாகக் கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்றது. பொது மக்கள் தரிசனத்துக்குப் பின்னர் மீண்டும் இந்தக் குளத்தில் அத்திவரதரை வைத்துவிட்டனர்.

தற்போதுள்ள 40 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் இந்தத் திருவிழாவைக் கண்டதில்லை. அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு முறை மட்டுமே கண்டதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தத் திருவிழாவை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்த இந்து சமய அறநிலையத் துறை திட்ட மிட்டுள்ளது. இதற்கான சரியான தேதியை முடிவு செய்வதற்காக முக்கிய கோயில் அர்ச்சகர்க ளுக்கு கடிதம் கொடுக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, ‘‘வைகாசி பிரம் மோற்சவத்துக்குப் பிறகு அத்தி வரதர் திருவிழா இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது. இந்த விழா ஜூலை மாதம் வருவதற் கான வாய்ப்புகளே உள்ளன. அர்ச்சகர்களின் ஆலோசனை களைப் பெற்று சரியான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்ப தற்காக அர்ச்சகர்களுக்கு கடிதம் கொடுத்தோம்.

புதிய பஞ்சாங்கம் வந்தபிறகு தேதியை முடிவு செய்யலாம் என்று பலர் கூறியுள்ளனர். புதிய பஞ்சாங்கம் வந்த உடன் தேதி இறுதி செய்யப்படும்’’ என்றார்.

இதுகுறித்து மேலும் சில கோயில் அலுவலர்கள், அர்ச்சகர் களிடம் கேட்டபோது, ‘‘வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்துக்குப் பின் ஆனி திருவோண விழா நடைபெறும். இதைத் தொடர்ந்தே அத்திவரதர் எழுந்தருளும் திருவிழா நடைபெற்றுள்ளது. அதன்படி ஜூலை முதல் வாரத்தில் இந்த விழா தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

கடன் வட்டி இல்லாமல் வாழ வழி இதோ::?

கடன்களை ஒழித்து வீட்டில் பணம் குவிய வேண்டுமா? இத செய்தாலே போதும்..!

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.

வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.

வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை (திரிதியை – மகாலட்சுமி) அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம். எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும்.

சனிக்கிழமை தொடுங்குவது சிறப்பு. பண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் (மரத்திடம் மானசீக மன்னிப்பு கோரி) சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.



காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும். வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும். கடுகு எண்னை கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் உன்ன உணவாகும். இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவது உங்கள் கண் கூடாக தெரியும். இது எளிய மிக மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரம்.

வடபழனி பணிமனைவில் ஓய்வறையில் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 தொழில் நுட்ப ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதில் பாரதி என்ற தொழில்நுட...