Monday, 29 July 2019

வடபழனி பணிமனைவில் ஓய்வறையில் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 தொழில் நுட்ப ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதில் பாரதி என்ற தொழில்நுட்ப ஊழியருக்கு திருமணம் முடிந்து 24 நாட்கள் மட்டுமே ஆகிறது. அவரது மனைவி நாகேஸ்வரி தனது கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களின் மனதை பதறவைத்தது. அப்போது நாகேஸ்வரி கூறியதாவது:

‘எனது கணவருக்கு அதிகாரிகள் திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். எங்கள் திருமணம் முடிந்த மறுநாளே எனது கணவர் பணியில் சேர்ந்து கையெழுத்து போட்டார். திருமணத்திற்காக எனது கணவர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால் அவருக்கு உயர் அதிகாரிகள் ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். நேற்று பணிக்கு வந்த பிறகு நான் எனது கணவருக்கு இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை போன் செய்தேன். ஆனால் அவர் எனது போனை எடுக்கவில்லை. அந்த அளவுக்கு பணி சுமை இருந்துள்ளது. போக்குவரத்து துறையில் முக்கியமான பணியான தொழில்நுட்ப ஊழியர்களின் ஓய்வு அறை தரமற்ற வகையில் உள்ளது. எனது கணவரின் இறப்புக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்’. இவ்வாறு நாகேஸ்வரி கண்ணீர் மல்க கூறினார்.


No comments:

Post a Comment