Tuesday, 12 February 2019

சனிதோஷம்

சூரியன்,செவ்வாய்,புதன்,ராகு, லக்னாதிபதி ஆகிய நட்சத்திர சாரத்தில் சனி இருந்தால் இந்த தோஷம் உண்டாகும் இந்த தோஷம் உடல் சோர்வு,ஞாபக மறதி, சோம்பேறிதனம்,எதிலும் தாமத போக்கு, அசுத்தம், உடலில் துர்நாற்றம் எடுக்கும் முடிவில் குழப்பம் மந்தபுத்தி, கொடுத்த வாக்கில் பிரச்சனை அல்லது காப்பாற்ற முடியாத நிலை குடும்பத்தில் அடிகடி சண்டை சச்சரவு, நிம்மதியின்மை,தரித்திரம் ஆகியவை தரும் இந்த தோஷம் சனியின் தாக்கம் வலுவாக காணப்படும்

குறிப்பு

சனி தோஷம் உள்ளவர்கள் சனிகிழமை அன்று நல்லெண்ணெய் தீபமேற்றி கருங்குவளை மலர்களுடன் சனிபகவானை தரிசனம் செய்துவிட்டு ஆஞ்சிநேயருக்கு துளசிமாலை சூட்டி தரிசனம் செய்துவந்தால் தோஷம் விலகும்
ஏழரைசனி,அஷ்டம சனி, கண்ட சனி, அர்தாஷ்டம சனி நடப்பவர்கள் சனிக்கிழமைதோறும் விரதம் இருந்து காகத்திற்கு எள்ளும் தயிரும் கலந்த சாதம் படைத்து கருங்குவளை அல்லது எள்தீபமேற்றி நீலநிற மலர்களால் சனிபகவானை அர்ச்சனை செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும் மேலும் பிரதோஷம் ஏகாதசி விரதம் இருந்து மகாதேவர் மற்றும் நாராயணரை வழிபட்டு வந்தால் சுபம் உண்டாகும்.அதேபோல் மாற்று திறனாளிகள்,பிச்சைகாரர்கள் அனாதைகள், முதியோர்கள் தாழ்ந்தவர்களுக்கு சிறுசிறு உதவிசெய்தால் சனிபகவான் மனம் இறங்கி நற்பலன்களை வாரி வழங்குவார் அதேபோல் தான தர்மங்கள் செய்ந்துவந்தால் சனிபகவான் உங்களை வாழ்கையில் உயர்ந்த பாதைக்கு கூட்டி செல்வார். தினமும் காகத்திற்கு அன்னமிட்டால் சிறப்பான பலன் தரும் பித்ரு சாபம் நீங்கும்

சனீஸ்வர பகவான் குணம்

தாழ்வுமனப்பான்மை, கடமை உணர்வு பாரபட்சம் இல்லாமை,எளிமை, பழமை கடமை தவறாமல் காரியத்தில் செயல்படுதல், நீதி தவறாமல் தீர்ப்பு, சம உரிமை, விதிப்படி நடத்தல், விவேகம், பொறுமை, கடமை உணர்வு, நேர்மை, அசுத்தம் எதையும் நிலைக்க வைத்தல்,தனிமை தண்டணை அளித்தல், கோபம், தானம், பாவம், சாபங்களை அனுபவித்தல், விரக்தி முற்போக்கு சிந்தனைகள் சோதனை,வீரம் உழைப்பு,சோம்பேறித்தனம், கடினம்

சனிபகவான் பார்வை:

சனிபகவான் 3,7,10 ஆகிய பார்வையால் பார்க்கிறார் "சனி பார்க்கும் இடம் பாழ்" என்பார்கள் இதில் 3ம் பார்வை கொடிய பார்வையாகவும் 7ம் பார்வை நெரடி தாக்கம் கொண்ட பார்வையாகவும் 10ம் பார்வை கர்மபார்வையாகவும் பார்க்கிறார் அதேபோல் சனியின் தீட்சமான திவ்ய பார்வையாகும் மும்மூர்த்திகளுக்கு அடுத்து திவ்ய பார்வை கொண்டவர் சனிபகவான் அதேபோல் இவரது பார்வை மிகவும் வக்கிரமானது தனது தீட்சமான பார்வைமூலம் ஜாகத்தையும் ஜாதகரையும் கர்மாவின் மூலம் கண்காணித்து அதற்கான கர்மபலனை கொடுத்து வருகிறார்

ஆசன வடிவம்

காக வாகனத்தில் வலது கையில் தண்டத்துடன் வில்லும் இடதுகையில் சூலத்துடன் அம்புடன் அருள்புரிகிறார்

ரத்தினம் - நீலக்கல்
மலர்- கருங்குவளை
கணித எண் - 8
அதிஷ்ட எண்- 3,4,5,6,7
ஆகாத எண் - 1,2,9
அதிதேவதை - எமன், காலபைரவர்
பிரித்யாதி தேவதை - பிரஜாபதி
பஞ்சபூதம் - ஆகாயம்
தானியம் - எள்
நிறம்- கருப்பு,கருநீலம்
பரிகாரம் - புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment